ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சாமியாரை தன்னுடைய கராத்தே கலையை பயன்படுத்தி சாமியாரை போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஆஷா சார்லெட் என்பவர் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள ருத்ராட்ச இல்லத்தில் வசித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களாக மணிகண்டன் என்ற சாமியார் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஷா வீட்டில் தனியாக இருந்த நிலையில், அதனை தெரிந்து கொண்ட அந்த சாமியார் ஆஷாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது ஆஷா தான் கற்றிருந்த கராத்தே கலையை பயன்படுத்தி சாமியாரின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி விட்டு, அக்கம்பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்துள்ளார். அதனையடுத்து அருகிலுள்ளவர்களின் உதவியுடன் சாமியாரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…