சேலம் : தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ரேஷன் பொருட்கள் ஒருசில இடங்களில் சுகாதாரமில்லாமல், எடை குறைவாக விநியோகிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
அதன்படி, ரேஷன் பொருட்களை எடைபோட்டு அதனை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்ய முடிவு செய்து தற்போது சோதனை முயற்சியாக 234 தொகுதிகளில் தலா 1 ரேஷன் கடையில் இதனை செயல்படுத்திட திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று சேலத்தில் குறிப்பிட்ட ஒரே ஒரு ரேஷன் கடையில் சோதனை முயற்சியாக செயல்படுத்தி தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…