தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.அந்த வகையில்,10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து,10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சமீபத்தில் வெளியிட்டது.மேலும்,தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி,செய்முறைத்தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.இதனால் 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட செய்முறைத் தேர்வானது,இனி 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான (பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்விப் பாடப்பிரிவி) செய்முறைத்தேர்வுகள் இன்று (ஏப்ரல் 25-ஆம் தேதி) முதல் மே 2-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன.
செய்முறைத் தேர்வை 10 லட்சதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.குறிப்பாக,சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…