அதிமுக பொதுச்செயலாளர் பதவி பிக் பாக்கெட் அடிக்கப்டுகிறது.! ஓபிஎஸ் கடும் கண்டனம்.!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முறையாக நடைபெறாமல் எதோ பிக்பாக்கெட் அடிப்பது போல நடைபெறுகிறது. – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியானது நேற்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 26ஆம் தேதி தேர்தல் தேதி என அறிவிக்கபட்ட நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி முதல் ஆளாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு :
இந்த அதிமுக இடைக்கால பொது செயலாளர் தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் , பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ஓபிஎஸ் வீட்டில் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டனர்.
கண்டனம் :
முதலில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில் , பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதில் சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. திடீர் என்று தேர்தலை அறிவிப்பது அதிமுக கட்சியை கொச்சை படுத்தும் செயல், ஆகும். எனவும், இதனை சட்டரீதியாக சந்திப்பதற்கு நங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
சட்ட போராட்டம் தொடரும் :
இவர்கள் (இபிஎஸ் பிரிவினர் ) திருந்தாத ஜென்மங்கள். சுயலாபத்திற்காக இதெல்லாம் செய்ய்கிறார்கள். உண்மையான தொண்டர்கள் உள்ளம் வருந்தி கொண்டு இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை நிறுத்த போவதில்லை. இனி அவர்களை பொருட்படுத்தப்போவதில்லை என்றும், நாங்கள் மாவட்டத்தோறும் மாவட்ட செயலாளர்களை சந்திக்க உள்ளோம் என பண்ருட்டி ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.
தேர்தல் விதி :
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுகவில் உயர்பதவிகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். தலைமை பொறுப்பு தேர்தல் அடைப்படை உறுப்பினர்களால் நடத்தப்பட வேண்டும்.
பிக் பாக்கெட் :
அதற்கு முன்பு உறுப்பினர் படிவம் புதுப்பிக்க வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதனையெல்லாம் முடித்த பிறகு தான் உயர்பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லாமல் எதோ பிக் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது.
கேடிகள் – ரவுடிகள் :
அதிமுக பொதுக்குழுவானது, கேடிகள். ரவுடிகள் வைத்து கொண்டு நடத்தப்பட்டது. பொருளாளராகிய நான் கட்சியின் வரவு செலவுகள் படிக்கச் வேண்டும் . ஆனால் அன்றைய தினம் அப்படி நடக்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையம் அந்த பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை என பல்வேறு கருத்துக்களை ஓபிஎஸ் குறிப்பிட்டார்.
இபிஎஸ் தான் காரணம் :
மேலும், நாடாளுமன்ற தேர்தல் தோல்வி முதல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் படுதோல்வி வரையில் அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.