தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…! இந்திய வானிலை ஆய்வு மையம்
தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது .டிசம்பர் 7,8 -ஆம் தேதிகளில் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.