புயல் உருவாக வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வாங்க கடலில் வரும் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து 29-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புயல் உருவாகும் தினத்தில் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.