ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி – கமலஹாசன்
ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையை கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையை கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) July 31, 2021