பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட்.
பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறை போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேசுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், காவல்துறையுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததாதல், செவிலியர்கள் சாலை மறியில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது.
மருத்துவ ரீதியாக நெருக்கடியான நேரங்களில் தங்கள் இன்னுயிரையே துச்சமாக நினைத்து பணியாற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக அவர்களுடன் பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…