குடிநீர்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.! விசாரணை வெளிப்படையாக நடைபெறும். – காவல் துறை.!
புதுக்கோட்டை, வேங்கைவயல் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடைபெரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர், வேங்கைவயல் ஊரில் பட்டியலின மக்கள் இருக்கும் பகுதியில் குடிநீர்த்தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் ஆரம்ப நாட்கள் விசாரணையில் பட்டியலின மக்களிடம் அதிக விசாரணை நடைபெறுவதாகவும், அது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாவும் பட்டியலின மக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை விளக்கும் விதமாக காவல்துறையினர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் புதுக்கோட்டடை மாவட்டம் இறையூர், வேங்கைவயல் ஊரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு இன்றி நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும். எனவும்,
இதுவரை 85 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. 36 பட்டியலின மக்களிடம், 49 பிற சமூகத்தை சேர்ந்தவர்களிடமும் சாட்சியம் பெறப்பட்டுள்ளது. என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.