குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்..!
சென்னை ஆவடி காவல் ஆணையத்திற்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 23 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இவர்களுக்கு அதிகாரிகள் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!
மேலும், குட்கா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் என மொத்தம் 26 பேரை ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். காவலர்களே குட்கா விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக இருந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 எஸ்.ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின்படி, டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.