தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் முதல்வரிடம் தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து, கடந்த 18-ஆம் தேதி, இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து முதல்வர் அவர்கள், குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையை ஏற்று சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.