கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
மேலும் போலீசார் பல மாநிலங்களிலும் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள தங்க நகைகளை கொள்ளையடித்தது சென்றனர்.
இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில் கொள்ளையன் முருகன் கும்பல் தான் கொள்ளையடித்தது தெரியவந்தது.பின்னர் இந்த கும்பல்தான் சமயபுரத்தில் நடைபெற்ற கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. போலீசார் 9 மாதங்களாக திணறி வந்த இந்த வழக்கில் தற்போது கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர்.
இதனால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடித்ததால் இரண்டு போலீசார்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்படி திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் விஜயகுமார் ஒப்பிலியப்பன் கோவிலிலும் , ஹரிஹரன் என்பவர் சமயபுரத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…