தானியங்கி இயந்திரத்தில் பணம்;கிடைக்கும் மஞ்சப்பை – இன்று தொடங்கும் திட்டம்!

Published by
Edison

தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் இன்று தொடக்கம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மக்காத 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றோரு புறம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரின் மஞ்சப்பை திட்டம் குறித்து பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்,தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், மஞ்சப்பை விற்பனை இயந்திரம் பெறும் ஒப்பந்தம் இறுதியாகி விட்டது. சந்தை,பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதல் இயந்திரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ இன்று தொடங்கி வைக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ்,மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ரூ.10 நாணயத்தை செலுத்தினால்,மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப் பை வரும் என்றும் அந்த இயந்திரத்தில் 40 பைகள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும்,மஞ்சப்பை தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சிலருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஐபிஎல் 2025 : ‘இதற்காக தான் என் பெயரை கொடுத்தேன்’! மௌனம் கலைத்த ஆண்டர்சன்!

ஐபிஎல் 2025 : ‘இதற்காக தான் என் பெயரை கொடுத்தேன்’! மௌனம் கலைத்த ஆண்டர்சன்!

மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…

19 mins ago

திருப்பதி தனி மாநிலமா.? கடுப்பான உச்சநீதிமன்றம்.!

டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…

26 mins ago

‘அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்’ ..கூடவே வெற்றிமாறன்? வெளியான பூஜை கிளிக்ஸ்!

சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…

45 mins ago

ஐபிஎல் 2025 : கையில 110 கோடி …அந்த 3 திமிங்கலத்துக்கு கொக்கி போடும் பஞ்சாப் கிங்ஸ்?

பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…

48 mins ago

அசத்தும் AI வழக்கறிஞர்., தலைமை நீதிபதியின் கேள்விக்கு அசராத பதில்கள்.!

டெல்லி :  நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…

1 hour ago

1000 கோடி முதலீடு, 1.75 லட்சம் கோடி வருமானம்.! மஸ்க்கின் மாஸ்டர் பிளான்.!

அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…

2 hours ago