நடப்பாண்டில் 61,000 மெட்ரிக் டன் பயறு வகைகளை கொள்முதல் செய்ய திட்டம்..!
பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.
நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
இதில், முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில்,
- சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- உணவு உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்க மூலதன நிதியாக ரூ 5 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.59.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.
- பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.
- 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் நட மானிய விலையில் விநியோகம் செய்யப்படும்.
- பனை மரங்களை வெட்டும் சூழல் வந்தால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வெட்ட வேண்டும்.
- நடப்பாண்டில் துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டம்.
- திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும் என தெரிவித்தார்.