திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அறிவாலயம்-விஜிலா சத்யானந்த்
உண்மையான திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அண்ணா அறிவாலயம் என்று அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் முன்னேற்ற கழகத்தில்(திமுக) இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் நெல்லை மாநகராட்சி மேயர், மாநிலங்களவை எம்.பி ஆகிய பதவிகளிலும் தற்போது அதிமுக-வில் மாநில மகளிரணி செயலாளர் பதவியிலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், திடீரென இவர் திமுகவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த்,
‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பிறகு, பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படவில்லை. ஒரு உண்மையான திராவிடன் செல்லவேண்டிய இடம் கமலாலயம் அல்ல அறிவாலயம். அதிமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, கட்சிக்காக உழைக்கும் மகளிருக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதனால் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவில் தொண்டாற்ற விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.