82 நாட்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல்
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது கடந்த 82 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது .
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவவதும் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையானது முற்றிலுமாக குறைந்து இருந்தது .உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்கப்பட்டது.இந்நிலையில் சில தளர்வுகளுடன் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது கடந்த 82 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது .சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 60 காசுகளாக உயர்ந்துள்ளது .டீசல் விலையானது 59 காசுகள் உயர்ந்து 68 ரூபாய் 81 காசுகளுக்கு விற்கப்படுகிறது.