ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்

Default Image

ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பிஎட் தேர்வு ஜூன் 8 ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் ஆசிரியர் தகுதித்தேர்வும் பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

தற்போது இது தொடர்பாக  உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட். தேர்வு ஜூன்13ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் . ஆசிரியர் தகுதி தேர்வு 8-ம் தேதி நடைபெறுவதால் பி.எட். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்