ரூ.2 லட்சத்திற்கு மேல் கடன் ஏற்பட்டதால், யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்…!
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வசித்து வரும் ராஜபாண்டியன் எனபவர் தனது கடனை அடைக்க யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யூடியூப் சேனலை பல்வேறு தேவைகளுக்காக பல வீடியோக்களை பார்ப்பதுண்டு. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தனக்கு கடன் அதிகமானதால் யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள நகை கடையின் பக்கவாட்டுச் சுவரில் ராஜபாண்டியன் கடையில் இருக்கும் நகைகளை திருடுவதற்காக கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் இதனை கண்ட உடன் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, ராஜபாண்டியன் அந்த இடத்தை விட்டு சென்றார். அவர் மாயமான நிலையில் தடவியல் சோதனையை மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆராய்ந்ததில் அவர் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வசித்து வரும் ராஜபாண்டியன் என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்டதால் அதனை அடைக்க யுடியூப் சேனல் பார்த்து நகை கடை சுவரில் துளையிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தன்னை பார்த்ததால் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறியுள்ளார்.