அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து, வீடியோ வெளியிட்ட நபர்…!
அதிமுக வேட்பாளருக்கு வாக்கு பதிவு செய்ததை, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் யாருக்கு வாக்களித்தோம் என வீடியோ எடுத்து வந்து, அரசியல் கட்சி பிரமுகர்களிடம் காண்பித்து, வாக்காளர்கள் சிலர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், பிள்ளையார் நத்தம் கிராமத்தில், 2 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வாக்கு மையத்திற்கு வாக்களிக்க சென்ற இளைஞர்கள் சிலர், யாருக்கு வாக்களிக்கிறோம என செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். பின் அதை சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் காண்பித்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுபோல் கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு பதிவு செய்ததை, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.