பேஸ் புக் பக்கத்திலிருந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து “விலைமாது” என பதிவிட்ட நபர் கைது!

Published by
Rebekal

பேஸ் புக் பக்கத்திலிருந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து “விலைமாது” என பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூல் தற்பொழுது மிக பிரபலமான ஒரு சமூக வலைதளம் ஆக இருந்தாலும், இதன் மூலம் பலர் உயிர் இழக்கவும் செய்கின்றனர். காரணம் நாம் அறிந்ததுதான் பெண்கள் தங்களது புகைப்படத்தை பதிவிடுவதை சில ஆண்கள் தவறான முறையில் எடுத்து பயன்படுத்தும் பொழுது அவமானம் தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்கின்றனர். சிலர் மட்டுமே குடும்பத்தினர் உதவியுடன் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் முகநூலில் பெண் ஒருவரது புகைப்படத்தை பதிவிட்டு விலைமாது என சித்தரித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக மணப்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சரத் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விலை மாது என சித்தரிக்கப்பட்டுள்ள தனது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குடும்பதின்மரிடம் கூறியுள்ளார். மேலும், புகைப்படத்துக்கு கீழே ஒரு வங்கிக் கணக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பெண் விலை மாது என குறிப்பிட்டு அவர்களை விரும்புபவர்கள் பணத்தை இந்த வங்கி கணக்கு அனுப்ப வேண்டும் என்றவாறு சரத்குமார் தொழில் செய்து வந்துள்ளார்கள். இவ்வாறு பலரிடம் மோசடி செய்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் தனது கணவருடன் இணைந்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகார் சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டு, சரத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தான் பெண்கள் தங்கள் புகைப்படத்தை இணையதள பக்கங்களில் போட கூடாது என்று சொல்வதை விட்டு விட்டு, உனது அம்மாவும் அக்காவும், மனைவியும் பெண்கள் தான் என சொல்லி ஆண்களை வளர்க்க வேண்டும்.
Published by
Rebekal

Recent Posts

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

25 minutes ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

1 hour ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

3 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

3 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

4 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

5 hours ago