மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது.!
மதுரையில் ஆ.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதியப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி, பலர் கைது செய்யப்பட்டனர், இந்த சம்பவத்தை அடுத்து அடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரை, அனுபநாடியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சமபந்தபட்ட குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்
இந்நிலையில், மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதியப்பட்டுள்ளது.