மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில், கத்தியுடன் புகுந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு.
மதுரை அருகே சிக்கந்தர்சாவடியில் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில், அவரது பிறந்தநாள் விழாவையொட்டி, கருத்துப் பொழிவு (கருத்தரங்கம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் புகுந்துள்ளார். இதனால் அந்நிகழ்ச்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் கத்தியுடன் புகுந்த அந்த நபரை பிடித்த விசிகவினர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கத்தியுடன் புகுந்தவர் சோழவந்தானைச் சேர்ந்த மாரீஸ்வரன் வயது (28) என்பது அடையாளம் காணப்பட்டு, திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில், எதற்காக கத்தியுடன் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…