பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தையை தூக்கில் தொங்க விட வேண்டும் என பதிவிட்ட நபர் கைது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் பங்கேற்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் கருத்துக்களை அவரை போன்றே வேடமிட்டு ஒரு குழந்தை நடித்து காட்டியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் வெளிவந்த பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு லட்சக்கணக்கானோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் குழந்தைகளை அழைத்து பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் சமூகவலைதளத்தில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்த குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக் கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுக நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் என்பவர் கயத்தார் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷ் குமார் பாபுவை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…