சிறுமி கலைவாணி வன்கொடுமை வழக்கில் தமிழக அரசு தாமதிக்காமல் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த வழக்கில் கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி கிருபானந்தனை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
திண்டுக்கல்லில் சிறுமி கலைவாணி (12) கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வன்கொடுமை செய்யப்பட்டு, உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, மார்பகத்தை கடித்து கொதறி கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் காவல்துறை அலட்சியம் காரணமாக குற்றவாளி மீதான குற்றத்தை நிரூபிக்காமல் விடுதலை செய்துள்ளது.
இது, காவல்துறை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரூம் தரும் நெருக்கடியால் காவல்துறை மெத்தனமாக நடப்பது கண்டிக்கத்தக்கது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுக்க வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை பெற்றுத்தரும் அரசும், காவல்துறையினரும் தவறியதால் குற்றத்தை நிரூபிக்கமுடியாமல் போனது அதிகரித்துள்ளது. இனியாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிபிசிஐடி போல காவல்துறையில் தனி பிரிவை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
அதுமட்டுமின்றி, தமிழக அரசு தாமதிக்காமல் திண்டுக்கல் சிறுமி கலைவாணி வன்கொடுமை, கொலை வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…