சத்தியமா பேனரை நா கிழிக்கல சூடம் அடித்து சத்தியம் செய்த கிராம மக்கள் !
சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அடுத்து உள்ள விளாங்குடி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக இரண்டு நாள்களுக்கு முன் நடை பெற்றது. இந்த விழாவிற்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் ,காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் கே .ஆர் ராமசாமி இருவரையும் கிராமத்தின் பொதுமக்கள் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைத்தனர்.
இருவரையும் சிறப்பாக வரவேற்கும் விதமாக ஐந்திற்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்து இருந்தார்கள்.குடமுழுக்கு விழாவிற்கு முன்தினம் இரவு அவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அனைத்தும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது.
கிழிந்த பேனர்களை மக்கள் அப்புறப்படுத்தினர்.இந்நிலையில் குடமுழுக்கு விழா முடித்த பிறகு கிராம மக்கள் அனைவரும் அழைத்து பேனர்களை கிழித்தது யாரு என கேட்க யார் கிழித்தது என கூறவில்லை.இதனால் கிராம மக்கள் கொல்லங்குடி காளி கோவிலில் சத்தியம் செய்ய வேண்டும் என முடிவு அடுத்தனர்.
விளாங்குடி கிராம மக்கள் அனைவரும் பேருந்து மூலமாக கொல்லங்குடி காளி அழைத்து சென்று அங்கு பூசாரி முன் சத்தியவாக்கு கொடுத்து ஒவ்வொரு நபரும் சூடத்தை அணைத்து சத்தியம் செய்தனர்.