கடலூர்: இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருடன்’.
இந்நிலையில், கடலூரில் கருடன் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நாடோடி பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் அண்ணா பாலம் அருகே உள்ள ‘நியூ சினிமா’ திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த நாடோடி பழங்குடி மக்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில், உடையை காரணம் காட்டி தியேட்டருக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் அளித்தனர். பின்னர், காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவை பெற்று கொண்ட கோட்டாட்சியர், தனது காரிலலேயே அவர்களை ஏற்றி சென்று திரையரங்கிற்கு அழைத்து வந்தார். அங்கு வட்டாட்சியர் நடவடிக்கையை அடுத்து நாடோடி பழங்குடி மக்கள் டிக்கெட் பெற்று கருடன் படம் பார்த்தனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…