தமிழக மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர்., அதற்கு இதுவே சாட்சி – முக ஸ்டாலின் பேச்சு
அடுத்து திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று தமிழக மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர் என கிராம சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பேச்சு.
வரப்போகின்ற சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவில் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அக்கட்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், அதிமுக கூட்டணி கட்சிகளில் சிலர் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என்றும் ஜேபி நட்டா தான் அறிவிப்பார் எனவும் ஒருபக்கம் கூறப்பட்டு வருகிறது. இங்க ஓபிஎஸ் எப்பொழுது பிரிந்து செல்வார் என்று தெரியாது. ஆனால் சென்றுவிடுவார். இதுபோன்று சூழல் தற்போது அதிமுகவில் நிலவி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று அங்கு திரண்டுள்ள மக்களிடம் முக ஸ்டாலின் கேட்டார். அதற்கு மக்கள் நீங்கள் தான் என தெரிவித்தனர். பின்னர் விளம்பரத்துக்காகவும், மற்றதற்காகவும் கேட்கவில்லை என குறிப்பிட்டார். மேலும், அடுத்து திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று தமிழக மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர். அதற்கு மக்கள் கிராம சபை கூட்டங்களே சாட்சி. அதிமுகவின் சாதனை பட்டியல்கள் எல்லாம் பொய், கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல்களில் முதலிடத்தில் உள்ளது என்று குற்றசாட்டியுள்ளார்.