மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள்-விஜய்க்கு அமைச்சர் பதிலடி
விஜயை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார்.
இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள். விஜய் போன்றோரின் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை.விஜய் யாருடைய பேச்சை கேட்டு சொன்னார் என்று தெரியவில்லை.
போன தீபவாளிக்கு நடிகர் விஜயை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது.விஜயின் படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது.அவருடைய மனசாட்சிக்கு தெரியும். பரபரப்புக்காக படத்தினை ஓட்ட வேண்டும் என்பதற்காக தன்னையும் அறியமால் அந்த கருத்தினை சொல்லி இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.