விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார்.அதன்பின் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.அப்போது பேசிய முதல்வர்,
“விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
அந்த வகையில்,மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.17 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.8,500 லிருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…