சுதந்திரத்திற்காக முன்னோர்கள் தேர்ந்தெடுத்த பாதை கடினமானது-கமல்ஹாசன் பதிவு
இந்தியா முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
We chose the hardest path to freedom but the wisest. I thank my Fathers today for giving Me this path to follow. We shall not deter from it. Long live India.
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2019
தனது ட்விட்டர் பக்கம் மூலமாக கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், சுதந்திரத்திற்காக முன்னோர்கள் தேர்ந்தெடுத்த பாதை கடினமானது.ஆனால் சிறந்த பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.அந்த பாதையை காட்டியதற்காக முன்னோர்களுக்கு நன்றி. அந்த பாதையில் இருந்து மாறிவிடாமல் தொடர்ந்து நடைபோடுவோம் என்று டிவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.