சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமையகத்தில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த 2019 இல் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இதனையடுத்து,குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகள் கடந்த பிப்ரவரியில்,வகுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவைகளுக்கு ஏப்ரல் 9 முதல் ஜூலை 9 வரை கால அவகாசம் வழங்கியதாக ராய் தெரிவித்தார்.
இதற்கிடையில்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,குடியுரிமை திருத்த சட்ட விதிகள் இன்னும் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்றும், கொரோனா தடுப்பூசி முடிந்ததும் சட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில்,கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ்,இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.அதன்படி,சத்தீஸ்கார்,குஜராத், ராஜஸ்தான்,அரியானா மற்றும் பஞ்சாபில் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான்,வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில்,சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமையகத்தில்,சென்னை மண்டல செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் ரத்தினம், செயற்குழு உறுப்பினர் பசீர் சுல்தான், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இதுகுறித்து,எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கூறுகையில்,”கொரோனோ தொற்றின் பேரழிவை கட்டுப்படுத்துவதில் அடைந்த படுதோல்வியை மறைத்து, மக்களின் கவனத்தை மத்திய மோடி அரசு திசை திருப்புகிறது,”,என்று தெரிவித்தனர்.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…