முத்தமிழ் அறிஞர் ; கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம் ஒரு பார்வை
திருக்குவளையில் வசிக்கும் முத்துவேலர் மகன் கருணாநிதி என்ற அடையாளத்தை கொண்ட கலைஞர் பின்னாளில் அதன் சுருக்கமான திமுக வின் தலைவராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் திரை உலகினில் வசனகர்த்தாவாக கால் வைத்தார். இயக்குனர், நடிகர் என்று பல பரிணாமங்களை கொண்ட கருணாநிதி நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களால் கலைஞர் என்று பட்டம் பெற்றவர்.
அண்ணா ஆரம்பித்த திராவிடர் கழகத்தின் பொருளாளராக 1960 ம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார். 1969 ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்த கலைஞர் பின்னர் திமுகவின் தலைவராக இறுதி நாள் வரை இருந்தார். சுமார் 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்து சரித்திர சாதனை படைத்துள்ளார்.
1957 ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நடந்த தாம் போட்டியிட்ட தேர்தல்களில் திமுக சார்பில் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார். இந்தியாவில் இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லாத வகையில் 12 முறை எம்.எல்.ஆக இருந்துள்ளார். 2016 ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. 1984 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை.
1969 முதல் 2011 வரை 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். 1969 ம் ஆண்டு அண்ணா மறந்ததை அடுத்து முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.