தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்:
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை :
பள்ளி கல்வித்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு விதி 17B-யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.
அதேபோல் ரூ.7500 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை:
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ஆம் தேதி பணியில் சேரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…