வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் பாலமுருகன். மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி காளீஸ்வரி (35), மகள் மங்கையர்திலகம் (12), மகன் அபிஷேக் (8) மூவரும், சிவகங்கை மாட்டம்,குறிஞ்சி நகர் பகுதியில் கார்த்திக்கேயன் வீட்டில், ஒத்திக்கு குடியிருந்துள்ளார்.
வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனமுடைந்த காளீஸ்வரி அவரது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காளீஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக, அந்த வீட்டின் சுவற்றில், என் மரணத்திற்கு காரணம் கார்த்திக்கேயன், நாகஜோதி மற்றும் சுந்தரி என எழுதி வைத்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் கார்த்திக்கேயன் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…