உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமான உணவகமாக இருக்கும்ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இனி சென்னை புழல் சிறையில் இருப்பார் என்று தெரிகிறது.
சென்னையில் தன் கடையில் வேலை செய்து வந்த பெண்ணின் கணவர் சாந்தகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 2001 ம் ஆண்டு தம் கடையில் வேலை செய்யும் ஜீவஜோதி என்ற பெண் மீது ஆசை கொண்ட ராஜகோபால் அவளை திருமணம் செய்து கொள்ள எண்ணினார். அதற்கு இடையூறாக இருந்த ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்தார்.
கொலை குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரை உடனே ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 7ம் தேதிக்குள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.ஆனால் உடல் நிலை கரணம் காட்டி மருத்துவமனையில் இருந்த அவர் இன்று நேரில் ஆஜரானார்.
படுக்கையில் படுத்த படியே நீதிமன்றம் வந்த ராஜகோபால் சென்னை புழல் சிறைக்கு அடைக்கப்பட்டார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…