காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது-சரத்குமார்
தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.2 டி.எம்.சி. காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசென் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது.வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் காவிரி நீர் திறப்பதை கர்நாடக அரசு, உறுதி செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.