ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.!
ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு, நேற்று விசாரிப்பதாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஒற்றை நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட கூடாது என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு நேற்று ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கினை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் விசாரிக்க உள்ளனர். தங்கள் வாதத்தை கேட்காமல் தீர்ப்பு வழங்கக்கூடாது என்பதற்காக இபிஎஸ் தரப்பிலும், கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.