பெண்கள், குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம்- கனிமொழி .!
முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிப்பதாக விஜய்சேதுபதி இருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி இறுதியாக முரளிதரன் வரலாற்று படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் ரித்திக் என்ற ஒரு நபர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.
பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 20, 2020