கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து தனிமைதான் – முதல்வர் பழனிசாமி
சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். இதனால் கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து தடுப்பு மருந்து மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது தான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலில் தமிழகம் 2வது கட்டத்திலிருந்து 3 வது கட்டத்துக்கு செல்லாமல் இருக்க கொரோனா பரவலை தடுக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.