10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் ஒரே வேலை டெண்டர் கொள்ளை- ஸ்டாலின் ..!

Default Image

விருதுநகர் மாவட்டத்தில் பட்டம்புதூரில் நடைபெற்று வரும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசுகையில், அதிமுக ஆட்சி முடியபோதும் கடைசி நேரத்தில் கஜானாவை காலி செய்யும் வேலை நடைபெற்று வருகிறது.

கொரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து மக்களுக்கு பணியாற்றிய கட்சி திமுக தான். உள்ளாட்சித் துறை ஊழலாட்சித் துறையாக மாற்றிவிட்டார் அமைச்சர் வேலுமணி. முதல்வர் பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதாரத்துறை தற்போது சூறையாடிக் கொண்டு உள்ளார். கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் ரூ.2855 கோடிக்கு டெண்டரை முதல்வர் விட்டுள்ளார்.

டெண்டர் விடுவதன் மூலமாக மக்களுக்கு நன்மை செய்கிறாரா..? இல்லை. முதல்வர் அவசர அவசரமாக டெண்டர் விடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அரசு பணத்தை சுருட்டுவதற்காக டெண்டர் விட்டுள்ளார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடந்துகொண்டிருக்கும் ஒரே வேலை டெண்டர் கொள்ளை தான் நடந்து கொண்டு இருக்கிறது.

தேர்தல் வரக்கூடிய நேரத்திலும் கடைசி நிமிட கையெழுத்துப் போட்டு அவசரஅவசரமாக டெண்டர் விடுவதில் தீவிரமாக முதல்வர் உள்ளார். பொதுமக்கள் கோரிக்கை வைத்த போதும், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டபோதும் மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய திட்டங்களை தயங்கிய முதலமைச்சர் தற்போது புதிய கமிஷனுக்காக புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார் என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்