ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்.! சபாநாயகர் அறிவிப்பு.!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தார். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், ஆளுநர் கையெழுத்திடாமல் இருந்ததையும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த சட்ட மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியதால், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமசோதாவை அடுத்து அதன் மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இறுதியாக ஆன்லைன் தடை சட்ட மசோதாவானது சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.