கவனக்குறைவு காரணமாக கார் விபத்தில் சிக்கி காற்றில் பறந்த முதியவர்!

Default Image

தென்காசி மாவட்டத்தில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள பனவடலிசத்திரம் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருக்கும் பொழுது, சாலையை கடப்பதற்காக கவனக்குறைவாக வந்த முதியவரின் இருசக்கர வாகனம் மீது கார் மோதி உள்ளது. இதனை அடுத்து முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளதுடன், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் நின்று கொண்டிருந்த மற்ற நால்வர் மீதும் மோதி உள்ளது. காரில் வந்தவர் சங்கரன் கோவிலை சேர்ந்த மொய்தின் பிச்சை என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

accident

முதியவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றது கார் ஓட்டி வந்தவர் அதிவேகமாக வந்ததுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தற்பொழுது இந்த விபத்து தொடர்பாக பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
4 indian cardinals
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai