ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவர் பொன்ராமை, அருண்குமார் என்ற இளைஞர் முதியவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்ராம். இவருக்கு வயது 70. இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது ஆடை கலைந்து இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மகள் மாரியம்மாள், தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் முதியவரின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி அருண் குமார் என்பவர் சிக்கினார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது தான்தான் முதியவரை கொலை செய்ய ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அருண்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் முதியவரின் வீட்டருகில் அடிக்கடி தனிமையில் இருப்பது வழக்கம். இந்நிலையில் நண்பருக்கு திருமணம் ஆனதால் அருண்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவில் மது போதையில் முதியவர் வீட்டுப்பக்கம் சென்றுள்ளார். முதியவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனையடுத்து முதியவர் கத்தியதால் பயத்தில் அவரது கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார் அருண்குமார் என விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…