நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான பெரிய ஆவுடைப்பேரி கண்மாய்க்கு அருகே காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவு படி வனவர் முருகன் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்களும் அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின்படி சிவகிரி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் துரை சிங்கம் தலைமையில் போலீசாரும் இணைந்து ஒரு பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்போது சிவகிரிப் இதை ஒட்டி அமைந்துள்ள காட்டுப்பகுதியில் முதியவர் ஒருவர் ஏதோ வனவிலங்கு இறைச்சியை உப்புக்கண்டம் போட்டுகொண்டு இருந்தார்.
அந்த முதியவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்தப் பெரியவர் குசப்பட்டி தெருவை சேர்ந்த சங்கரன் (62 )என்பது தெரியவந்தது. அவர் கூண்டு வைத்து முள்ளம் பன்றியை வேட்டையாடி கொன்றது தெரியவந்தது.
அவரிடம் இருந்து முள்ளம் பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவரை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்.
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி…
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில்…