யாசகம் மூலம் கிடைத்த 10,000 ரூபாயை நெல்லை கலெக்டரிடம் வழங்கிய முதியவர்

The old man who gave the 10,000 rupees he got through begging to the paddy collector

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டி வயது 70.இவர் கடந்த சில ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று வருகிறார்.அவருக்கு கிடைக்கும் பணத்தை கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த  குடும்பங்கள்,தொழிலாளர்கள்,பள்ளிகள் என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் பூல்பாண்டி தான் யாசகத்தின் மூலம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேற்று  நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு விடம்  வழங்கினார்.இவர் சிலமாதங்களுக்கு முன்னர் மதுரை கலெக்டரிடம் 2 லட்சத்து 70 ஆயிரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.