குறுக்கே வந்த முதியவர்.! தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்த கார்.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், முதியவரும் பரிதாப பலி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு கார் கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் ஒருவர் மீது வேகமாக வந்த கார் மோதியது.
  • பின்னர் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவரை தாண்டி அடுத்த சாலையில் பாய்ந்து. அப்போது அங்கு வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், மற்றும் சைக்கிளில் வந்த முதியவரும் உயிரிழந்தனர்.

மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு கார் கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் ஒருவர் மீது வேகமாக வந்த கார் மோதியது. பின்னர் நிலை தடுமாறிய கார் சாலையில் இருந்த தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்தது. அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன், மைந்தன், ஜெயந்திலால்மணி, ஜெபக்கனி ஆகிய 4 பெரும் சம்பவ இடத்திலும், சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் கிருஷ்ணன், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சையின்றி பரிதமாக உயிரிழந்தார்.

மேலும், மதுரையில் இருந்து சென்ற காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபட்ட போது, மீட்பு வாகனத்திலிருந்த இரும்பு சங்கிலி அறுந்து காவலர் பெருமாள் தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் இச்சம்பவத்தை பற்றி கூறுகையில், பொதுவாக தேசிய நெடுஞ்சாலையை அணுகு சாலை வழியாகத்தான் கடக்கவேண்டும், ஆனால் இங்கு சாலை விதிகளை பொருட்படுத்தாமல் சென்று, சைக்கிள் ஓட்டி பலியானதுடன் மேலும் 4 உயிர்களும் அநியாயமாக பலியானதாக தெரிவித்தார். மேலும், அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

29 minutes ago
தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

47 minutes ago
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

3 hours ago

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

3 hours ago

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

4 hours ago

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

5 hours ago