கடலில் கச்சா எண்ணெய் கசிவு.! மே 31தான் கடைசி தேதி.! எண்ணெய் நிர்வாகம் உறுதி.!
நாகை மாவட்டம் பட்டினம்சேரியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் மே 31க்குள் முழுதாக அகற்றப்படும் என எண்ணெய் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் அருகே பட்டினம்சேரி மீனவ கிராமத்தில் கடல் பகுதியில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் சார்பாக கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய் பாதிக்கப்பட்டு இருந்தது.
கடலில் கச்சா எண்ணெய் :
இந்த குழாயானது கடந்த 2ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கண் எரிச்சல் உட்பட உடல் உபாதைகளுக்கு உள்ளாகினர்.
போராட்டம் :
இதனை அடுத்து, அங்குள்ள மீனவ மக்கள் கடலுக்கு செல்லாமல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து குழாயை சீர் செய்வதாக உறுதியளித்த நிர்வாகம், இன்று கிராம மக்கள், அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நிர்வாகம் உறுதி :
அந்த பேச்சுவார்த்தையில், மே மாதம் 31ஆம் தேதிக்குள் அப்பகுதியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பதிக்கப்பட்டுள்ள உள்ள குழாய்கள் அனைத்தும் அகற்றப்படும் என சிபிசிஎல் நிர்வாகம் உறுதியளித்தனர்.