ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டார் – முன்னாள் எம்.பி.சுந்தரம்
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள் திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவருடன் அதிமுக-வின் முன்னாள் எம்.பி.-யான பி.ஆர்.சுந்தரம் அவர்களும் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்.பி.சுந்தரம் அவர்கள், அதிமுக ஜாதி கட்சியை போல் மாறிவிட்டது. ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டார். பதவி கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் ஓபிஎஸ் செயல்படுகிறார், எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார் என்றும், வேலுமணி தங்கமணி கட்சியினர் என்றும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அதிமுக வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.