மருத்துவர் இல்லாத போது பிரசவம் பார்த்த செவிலியர்..! குழந்தை உயிரிழப்பு..!
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயிரிழந்த நிலையில் பிறந்த குழந்தை.
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுபாஷினி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரவில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தினால் அந்த பெண்ணுக்கு செவிலியர் இருவர் சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பெண்ணுக்கு பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனையடுத்து, பிரசவத்தில் குழந்தை உயிரிழந்ததால், சுபாஷினியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.