இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.
வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை எழுத, நாடு முழுவதும், 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 714 மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்களே நீட் தேர்வை எழுத பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 16 ஆயிரத்து 724 பேர் குறைவாக தேர்வு எழுத பதிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமையின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கையை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 188-ல் இருந்து 238 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…